உலகம்

செல்லப்பிராணிகளை வளர்க்கும் பெற்றோர்கள் சுயநலம் கொண்டவர்கள்: போப் பிரான்சிஸ் விமர்சனம்...

குழந்தைகளுக்குப் பதிலாக செல்லப்பிராணிகளை வளர்க்கும் பெற்றோர்கள் சுயநலம் கொண்டவர்கள் என்று போப் பிரான்சிஸ் விமர்சித்துள்ளார். 

Malaimurasu Seithigal TV

ஜோசப்பின் உருவம் பற்றி குறித்து பேசிய போப் ஆண்டவர் இந்த கருத்தினை தெரிவித்தார். நாம் சுயநலத்தின் ஒரு வடிவத்தைக் காண்கிறோம். சிலர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாமல் இருப்பதைப் பார்க்கிறோம். சில நேரங்களில் அவர்களிடம் ஒன்று உள்ளது. அதுதான் ஆனால் குழந்தைகளின் இடத்தைப் பிடிக்கும் நாய்கள் மற்றும் பூனைகள் அவர்களிடம் உள்ளன. இது மக்களை சிரிக்க வைக்கலாம் ஆனால் இது நிஜம். செல்லப்பிராணி வளர்ப்பு தந்தையையும் தாய்மையையும் மறுப்பது மற்றும் நம்மைக் குறைத்து, நமது மனிதநேயத்தைப் பறிக்கிறது 
என்று போப் கூறினார்.