அமெரிக்காவின் ஓக்லஹோமா, மாநிலத்தை சேர்ந்த ரியான் ஹாம்மன்ஸ் என்ற ஐந்து வயது சிறுவன் தன்னுடைய முன்ஜென்ம கதைகளை சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளான்.
இந்து மற்றும் பௌத்த கொள்கைகளில் மறுபிறவி என்பது ஒரு முக்கிய நம்பிக்கையாகும். இதன்படி, ஒருவரின் ஆன்மா மரணத்திற்குப் பின் மற்றொரு உடலில் மறுபிறவி எடுக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நம்பிக்கை கர்மாவின் பயன்களாலும் நன்மை, தீமைகளின் விளைவுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற கருத்துகள் பெரும்பாலும் சந்தேகத்துடனே பார்க்கப்படுகின்றன.
எனவே சிறுவனின் தயார், அவர் கூறியதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கற்பனை என நினைத்திருக்கிறார், மூன்று வயதிலிருந்தே ரியான் தனது முன்பிறவி பற்றி கூறிவந்துள்ளார்.இந்த நிலையில் தனது தாயாருடன் ஒரு புத்தகத்தை படித்து கொண்டிருந்த போது, அதில் உள்ள ஜார்ஜ் ராஃப்ட் என்ற நடிகரை அவர் சுட்டிக்காட்டி, இவரை தனக்கு நன்றாக தெரியும் என்றும் நங்கள் இருவரும் சில படங்களில், சந்தித்திருப்பதாகவும் கூற அதிர்ச்சியடைந்துள்ளார் தயார், மேலும் அந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்ட அதிலிருந்த ஒரு குழு புகைப்படத்தில் உள்ள ஒருவரை கட்டி "நான் இருக்கேன் பாருங்க என சொல்லி இருக்கிறார்" சிறுவன் தனது முன்பிறவி பெயர் என சொன்ன பெயரும் அதுவும் ஒத்துப்போக இதை பற்றி ஆராய தொடங்கியுள்ளார் சிறுவனின் தாய்.
சில தகவல்களை சேகரித்த பிறகு, சிறுவனிடம் அவனுடைய முன்பிறவியை பற்றி முழுமையா கேட்டுள்ளார், அப்போது ரியான் தனது முந்தைய வாழ்க்கையில் "மார்ட்டி மார்ட்டின்" என்ற பெயரில் ஹாலிவுட்டில் ஒரு முகவராக (ஏஜென்ட்) வாழ்ந்ததாகக் கூறுகிறான்.ரியான், உலகம் முழுவதும் பயணம் செய்ததாகவும், ஐந்து முறை திருமணம் செய்ததாகவும், பிராட்வேயில் நடனமாடியது, ஹாலிவுட்டில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தது போன்றவற்றைப் பற்றி விவரிதான்.
இதுமட்டுமல்லாமல் தனக்கு பூனைகள் என்றால் சுத்தமாக பிடிக்காது என்றும், எனக்கு கண்ணாடிகள் போடுவது மிகவும் பிடிக்கும் எனவே உலகின் சிறந்த கண்ணாடிகளை வாங்கி வைத்திருந்ததாகவும், தனக்கும் ஹாலிவூட்டின் பிரபலமான "மார்லின் மன்றோவுக்கும்" தொழில் முறையாகவும் தனிப்பட்டவிதமாகவும் நல்ல நட்பு இருந்ததாக தெரிவித்துள்ளார். அவரை பற்றி சொல்ல சொல்ல உணர்ச்சிவசமடைந்த அவர் கலிபோர்னியாவில் "ராக்ஸ்பரி" என்ற வீதியில் உள்ள தனது வீட்டுக்கு தன்னை அழைத்து, செல்ல சொல்லி
தாயாரிடம் கெஞ்சியுள்ளார்.
தனது மகனின் வார்த்தைகளால் ஆர்வமும் கவலையும் அடைந்த தயார் சிண்டி, இந்த விஷயத்தை மேலும் ஆராய, விர்ஜினியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழந்தை மனநல மருத்துவர் டாக்டர் ஜிம் டக்கரை சந்தித்துள்ளார். பின்னர் இது குறித்து ஆராய்ச்சி செய்த டக்கர் சிறுவன் கூறிய 55 தகவல்களும் "மார்ட்டி மார்ட்டின்" வழக்கையோடு பொருந்தியுள்ளதாக தகவல் அளித்துள்ளார்.
ரியானின் கதை, உலகளவில் வைரலாகி, மறுபிறவி குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது. இது, மனித மனதின் மர்மங்களையும், ஆன்மாவின் பயணத்தையும் பற்றி சிந்திக்க வைக்கிறது.எது எப்படியோ, ரியான் ஹாம்மன்ஸின் கதை, அறிவியலாலும் நம்பிக்கையாலும் புரிந்துகொள்ளப்படாத மனித அனுபவங்களைப் பற்றிய கேள்விகளை நம்மிடையே எழுப்புகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்