உலகம்

உக்ரைன் அதிபருக்கு ஸ்கெட்ச் போட்ட ரஷ்யா!!.. 400 பேர் ஊடுருவியதாக தகவல்!!

உக்ரைன் அதிபரை கொலை செய்ய ரஷ்யா திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6 நாட்களாக குண்டு மழைகளை பொலிந்து வருகிறது. உக்ரைனும் இதற்கு தொடர்ந்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது..

இந்நிலையில், தன்னைக் கொலை செய்வதன் மூலம் உக்ரைனைக் வீழித்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறிவருகிறார். 

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய தலைநகர் கீவில் ரஷ்ய கூலிப்படையினர் 400 பேர் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா அதிபர் புதின் நெருங்கிய கூட்டாளிகள் தலைமையிலான வாக்னர் எனப்படும் போராளிகள் குழுவை வரவழைத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.