உலகம்

ரஷ்யா - உக்ரைன் மோதல் : இதுவரை 210 அப்பாவி மக்கள் பலி!!

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, அந்நாடு மீது கடந்த வியாழக்கிழமை போர் தொடுத்தது.

Malaimurasu Seithigal TV

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ரஷிய தாக்குதலில் உக்ரைனில் நேற்று காலை நிலவரப்படி, அதாவது 4 வது நாளில் 210 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாகவும், ஆயிரம் பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் உக்ரைன் அரசு உயர் அதிகாரி லியுட்மிலா டெனிசோவா தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட பதிவில், இதுதவிர குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கட்டிங்களும் தாக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார். கீவ் பகுதியில் இருக்கும் மருத்துவமனை குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை கொல்லப்பட்டதையும், கார்கிவ் குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டி கூறியுள்ளார்.