உலகம்

உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்புகளிலிருந்து விலகும் ரஷ்யா!

Tamil Selvi Selvakumar

உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து கூறிய ரஷ்ய நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் பியோட்டர் டால்ஸ்டாய், ரஷ்ய சொத்துகள் முடக்கம், பொருளாதாரத் தடைகள் போன்ற விவகாரங்களில், மேற்குலக நாடுகள் சர்வதேச விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால், ரஷ்யா இனி சில சர்வதேச கடமைகளை நிறைவேற்றாது என்று அவர் கூறியுள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகள், மிகவும் சாதகமான நாடு என்ற வர்த்தக அந்தஸ்தில் இருந்து ரஷ்யாவை நீக்கியுள்ளன. இதற்கு பதிலடியாக சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகும் முடிவை ரஷ்யா எடுத்துள்ளதாக, உலக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.