உலகம்

வரலாற்றை தனக்கு ஏற்றார்போல் திருத்திக்கொள்ளும் ரஷ்ய அதிபர்- அமெரிக்கா சாடல்!

Tamil Selvi Selvakumar

ரஷ்ய அதிபர் புதின் வரலாற்றை தனக்கு ஏற்றார்போல் திருத்திக்கொள்வதாக அமெரிக்கா விமர்சித்துள்ளது. இரண்டாம் உலகப்போரில் நாசி படைகளை தோற்கடித்து 77ம் ஆண்டு வெற்றி தினத்தில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் போருக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என குற்றஞ்சாட்டினார். மேலும் தாயகத்தை காத்திடவே ரஷ்ய வீரர்கள் போராடி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் புதின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, அவர் தனக்கு ஏற்றாற்போல் வரலாற்று குறிப்புகளை திருத்திக்கொள்வதாக சாடியுள்ளது. இதனிடையே ரஷ்யாவின் தொடர் தாக்குதலை கண்டிக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடையை ஜப்பான் அறிவித்துள்ளது. அதன்படி தனிநபர்களின் சொத்துக்களை முடக்குவதாகவும், அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட சில ரஷ்ய குழுக்களுக்கு அதிநவீன பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்வதாகவும் அறிவித்துள்ளது.