உலகம்

ஆடைகள் இல்லாமல் லாரிகளில் ஏற்றி செல்லப்பட்ட ரஷ்ய வீரர்கள்!

உக்ரைனில் கலகம் செய்த ரஷ்ய வீரர்கள் பலர் ஆடைகள் இல்லாமல், கைகால்கள் கட்டப்பட்டு, லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Tamil Selvi Selvakumar

உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் பலர் கலகத்தில் ஈடுபடுவதாகவும், போருக்கு தயங்குவதாகவும் தகவல் வெளியான நிலையில், சிறப்பு தளபதி ஒருவரை விளாடிமிர் புடின் நிர்வாகம் உக்ரைனுக்கு அனுப்பி வைத்தது.

இந்த  தளபதியின் உத்தரவை அடுத்தே, கலகத்தில் ஈடுபட்ட ரஷ்ய வீரர்கள் ஆடை இல்லாமல், கைகால்கள் கட்டப்பட்டு குண்டுகட்டாக லாரிகளில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மூன்றே நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றலாம் என புறப்பட்ட ரஷ்ய துருப்புகள், 12-வது வாரமாக உக்ரைனில் போரிட்டு வருகிறது.

தற்போது பல ரஷ்ய வீரர்களும் சலிப்படைந்துள்ளதாகவும், போரிட தயங்குவதாகவும், அதனாலையே ரஷ்யா கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.