இந்திய பங்குச் சந்தைல ஒரு பெரிய சர்ச்சை இப்போ பேசு பொருளா இருக்கு. அமெரிக்காவைச் சேர்ந்த ஜேன் ஸ்ட்ரீட் (Jane Street)னு ஒரு ப்ராப்ரைட்டரி ட்ரேடிங் நிறுவனம், இந்தியாவுல மார்க்கெட்டை மேனிபுலேட் பண்ணி, சட்டவிரோதமா பெரிய லாபம் பார்த்ததா Securities and Exchange Board of India (SEBI) குற்றம்சாட்டி, இந்த நிறுவனத்தை இந்திய பங்குச் சந்தையில இருந்து தடை செய்திருக்கு. இதனால, ஜேன் ஸ்ட்ரீட் மேல 4,843 கோடி ரூபாய் லாபத்தை முடக்கி, இந்திய மார்க்கெட்டுல எந்த ட்ரேடிங்கும் பண்ணக் கூடாதுனு SEBI உத்தரவு போட்டிருக்கு.
ஜேன் ஸ்ட்ரீட் ஒரு உலகளவில பிரபலமான ஹை-ஃப்ரீக்வென்ஸி ட்ரேடிங் (HFT) நிறுவனம். 2000-ல நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 45 நாடுகளில் 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களோட இயங்குது. இவங்க கிளையன்ட்ஸ் பணத்தை மேனேஜ் பண்ணாம, தங்களோட சொந்த கேப்பிட்டலை வச்சு ட்ரேடிங் பண்ணுறவங்க.
இந்தியாவுல JSI Investments, JSI2 Investments, Jane Street Singapore Pte Ltd, Jane Street Asia Trading Ltdனு நாலு என்டிட்டீஸ் மூலமா இவங்க ஆபரேட் பண்ணாங்க. 2023 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை, இவங்க இந்திய மார்க்கெட்டுல 36,502 கோடி ரூபாய் லாபம் பார்த்தாங்க, அதுல 43,289 கோடி ரூபாய் இன்டெக்ஸ் ஆப்ஷன்ஸ் (குறிப்பா Bank Nifty)ல இருந்து வந்தது. ஆனா, இந்த லாபம் சுத்தமான ட்ரேடிங் ஸ்ட்ராட்டஜியால வந்ததில்லைனு SEBI சொல்லுது.
ஜேன் ஸ்ட்ரீட் முக்கியமா “Intra-day Index Manipulation” மற்றும் “Extended Marking the Close”னு ரெண்டு ஸ்ட்ராட்டஜிகளை யூஸ் பண்ணி, Nifty மற்றும் Bank Nifty இன்டெக்ஸ்களை மேனிபுலேட் பண்ணதா SEBI கண்டுபிடிச்சிருக்கு. இது எப்படி வேலை செய்யுது? எளிமையா சொல்லணும்னா, இவங்க காலையில Bank Nifty இன்டெக்ஸ்ல இருக்கிற ஸ்டாக்ஸ் (மாதிரி, ICICI Bank, HDFC Bank, Axis Bank) மற்றும் ஃப்யூச்சர்ஸை பெரிய அளவுல வாங்கி, இன்டெக்ஸை மேல தள்ளுவாங்க. இதனால, இன்டெக்ஸ் விலை ஆர்ட்டிஃபிஷியலா உயர்ந்து, ரீடெயில் இன்வெஸ்டர்ஸ் இந்த உயர்வை நம்பி ட்ரேட் பண்ண ஆரம்பிப்பாங்க.
அதே நேரத்துல, ஜேன் ஸ்ட்ரீட் இன்டெக்ஸ் ஆப்ஷன்ஸ்ல பெரிய பொசிஷன்ஸ் (புட் ஆப்ஷன்ஸ் வாங்கி, கால் ஆப்ஷன்ஸ் வித்து) எடுத்து வைப்பாங்க. பிறகு, மதியமோ இல்லை மார்க்கெட் மூடுறதுக்கு முன்னாடி, இவங்க காலையில வாங்கின ஸ்டாக்ஸையும் ஃப்யூச்சர்ஸையும் அக்ரெஸிவா வித்து, இன்டெக்ஸை கீழ இறக்குவாங்க. இதனால, இவங்களோட புட் ஆப்ஷன்ஸ் வேல்யூ அதிகமாகி, கால் ஆப்ஷன்ஸ் வேல்யூ குறைய, பெரிய லாபம் பார்க்க முடியுது.
மாதிரி, 2024 ஜனவரி 17-ஆம் தேதி, ஜேன் ஸ்ட்ரீட் ஒரே நாளில் 734.93 கோடி ரூபாய் லாபம் பார்த்தது. இந்த நாளில், Bank Nifty இன்டெக்ஸ் காலையில 4,370 கோடி ரூபாய்க்கு ஸ்டாக்ஸ் மற்றும் ஃப்யூச்சர்ஸ் வாங்கி, இன்டெக்ஸை உயர்த்தி, பிறகு மதியம் இவற்றை வித்து, இன்டெக்ஸை கீழ இறக்கி, ஆப்ஷன்ஸ் ட்ரேடிங்குல பெரிய லாபம் பார்த்தாங்க. இந்த “பம்ப் அண்ட் டம்ப்” ஸ்ட்ராட்டஜி, ரீடெயில் இன்வெஸ்டர்ஸை ஏமாத்தி, இவங்களுக்கு லாபத்தை கொடுத்தது. SEBI-யோட ஆய்வு சொல்றது, 2023 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை, 21 எக்ஸ்பைரி டேஸ்ல இப்படி மேனிபுலேஷன் நடந்திருக்கு.
SEBI இந்த மேனிபுலேஷனை 2024-ல ஆரம்பத்துலயே கவனிச்சு, 2025 பிப்ரவரியில் National Stock Exchange (NSE) மூலமா ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு ஒரு வார்னிங் லெட்டர் அனுப்பியிருக்கு. இந்த லெட்டர்ல, “இன்டெக்ஸ் ஆப்ஷன்ஸ்ல பெரிய ரிஸ்கி பொசிஷன்ஸ் எடுக்காதீங்க, மார்க்கெட் மேனிபுலேஷனை தவிருங்க”னு சொல்லியிருக்கு. ஜேன் ஸ்ட்ரீட் இதுக்கு “நாங்க ரெகுலேஷன்ஸை ஃபாலோ பண்ணுவோம்”னு உறுதி கொடுத்தாலும், 2025 மே மாதத்துல மறுபடியும் இதே மாதிரி “Extended Marking the Close” ஸ்ட்ராட்டஜியை யூஸ் பண்ணி மேனிபுலேட் பண்ணதை SEBI கண்டுபிடிச்சு. இதனால, 2025 ஜூலை 3-ஆம் தேதி, SEBI ஒரு 105 பக்க இன்டரிம் ஆர்டர் போட்டு, ஜேன் ஸ்ட்ரீட்டோட நாலு என்டிட்டீஸையும் இந்திய மார்க்கெட்டுல இருந்து தடை செய்து, 4,843 கோடி ரூபாயை எஸ்க்ரோ அக்கவுண்ட்ல டெபாசிட் பண்ண சொல்லியிருக்கு.
SEBI-யோட இந்த ஆர்டரில், “ஜேன் ஸ்ட்ரீட் ஒரு நல்ல நம்பிக்கை உள்ள மார்க்கெட் பார்ட்டிசிபன்ட்டா இல்லை. இவங்களோட இந்த அக்ரெஸிவ் ட்ரேடிங், மார்க்கெட் இன்டெக்ரிட்டியை பாதிக்குது, குறிப்பா ரீடெயில் இன்வெஸ்டர்ஸுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துது”னு சொல்லப்பட்டிருக்கு. SEBI-யோட முந்தைய ஆய்வு சொல்ற மாதிரி, ஆப்ஷன்ஸ் மார்க்கெட்ல 93% ரீடெயில் இன்வெஸ்டர்ஸ் நஷ்டமடையறாங்க, ஆனா ஜேன் ஸ்ட்ரீட் மாதிரியான நிறுவனங்கள் பெரிய லாபம் பார்க்குது. இதனால, இந்த மேனிபுலேஷன் இந்திய மார்க்கெட்டோட நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குது.
இந்தியாவோட டெரிவேட்டிவ்ஸ் மார்க்கெட் உலகத்துலயே மிகப் பெரியது, குறிப்பா ஆப்ஷன்ஸ் கான்ட்ராக்ட்ஸ் எண்ணிக்கையில். 2020-ல இருந்து 2025 மார்ச் வரை, ஆப்ஷன்ஸ் ப்ரீமியம் 11 மடங்கு உயர்ந்திருக்கு, இதுல பெரும்பாலும் ரீடெயில் இன்வெஸ்டர்ஸ் பங்கு அதிகம். ஆனா, இந்த மார்க்கெட் இவ்வளவு பெருசா இருந்தாலும், மேனிபுலேஷனுக்கு எளிதில் இலக்காகுது. ஜேன் ஸ்ட்ரீட் கேஸ், இந்திய மார்க்கெட்டோட இந்த பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கு.
இந்திய மார்க்கெட் இன்னும் ஸ்ட்ராங்கான, ட்ரான்ஸ்பரன்ட்டான சிஸ்டமா மாற, இந்த மாதிரி ஆக்ஷன்ஸ் ஒரு மைல்கல்!.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.