உலகம்

டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு...  காவல் அதிகாரி பலி...

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல் அதிகாரி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Malaimurasu Seithigal TV

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதேநேரம் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேற்கு டெக்சாஸில் வீட்டில் தடுப்புகளை அமைத்துக் கொண்டிருந்தவரை போலீசார் தட்டி கேட்ட போது இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. 4 போலீஸ் அதிகாரிகளை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டில் காவல் அதிகாரி ஒருவர் உயிரிழக்க எஞ்சிய 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.