உலகம்

இலங்கை வந்த பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல்!

Malaimurasu Seithigal TV

பாகிஸ்தான் கடற்படையின் ’பி.என்.எஸ் தைமூர்’ என்ற போர்க்கப்பல் அதிகார்ப்பூர்வமாக நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

 கப்பலுக்கு வரவேற்பு

 அதன்படி, இராணுவ மரபுப்படி கப்பலை வரவேற்க கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘பி.என்.எஸ் தைமூர்’ என்ற கப்பலின் மொத்த நீளம் 134 மற்றும் 169 மீட்டர்கள், அதன் கட்டளை அதிகாரி கேப்டன் எம். யாசிர் தாஹிர் ஆவார்.

 ‘பி.என்.எஸ் தைமூர்’ அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ சந்திப்பு  மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.மேலும், சம்பந்தப்பட்ட கப்பல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

 பாகிஸ்தான்சிறீலங்கா கூட்டுப் பயிற்சி

 இந்தக் காலப்பகுதியில் இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அதன் ஊழியர்களும் இலங்கை கடற்படையினரும் கலந்து கொள்ளவுள்ளனர். ‘பி.என்.எஸ் தைமூர்’ என்ற கப்பல் தீவை விட்டு வெளியேறும் போது மேற்குக் கடலில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.