வடகொரியா கம்யூனிஸ்ட் சக்திகளின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரியாவில் பதற்றம் ஏற்பட்டு வருவதாகவும் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் தென் கொரிய நாடாளுமன்றத்தில் எமர்ஜென்சி எனப்படும் ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக இரவோடு இரவாக அதிபர் யூன் சுக் யோல் நேற்று அறிவித்தார். அதனை தொடர் நாடாளுமன்றத்தின் வெளியே கூடிய மக்கள் தென் கொரிய அதிபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
அதனை தொடர்ந்து நள்ளிரவில் நடத்தப்பட்ட அவசர வாக்கெடுப்பில் 300 எம்.பி-கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 190 எம்.பி-கள் எமர்ஜென்சிக்கு எதிராக வாக்களித்தனர்.அதனை தொடர்ந்து அதிபர் கொண்டு வந்த எமர்ஜென்சி சட்டம் செல்லாது என சபாநாயகர் அறிவித்தார். இந்த நிலையில் தென் கொரிய சட்டத்தின் படி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் சட்டத்தை நீக்கினால் அதிபர் உடனடியாக சட்டத்தை நீக்க வேண்டும். இந்த நிலையில் அதிபரின் சொந்த கட்சியே இந்த அவசர சட்டத்தை நீக்க கோரியது. அதிபர் யூன் எமர்ஜென்சி சட்டத்தை நீக்குவதாக அறிவித்ததை தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு வெளியே இருந்த போராட்டக்காரர்கள் அந்த வெற்றியை கொண்டாடினர்கள்.
தென் கொரியாவின் எதிர்க்கட்சிகள் அதிபர் யூன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.அதிபர் யூனின் கட்சி நாடாளுமன்றத்தில் பெருமான்மை இழந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அரசியல் ரீதியான அழுத்தங்களை கொடுத்து வருகிறது.அதை தடுக்கவே ராணுவ ஆட்சியை அதிபர் யூன் அமல்படுத்த முயன்றதாக குறிப்பிடப்படுகிறது.
கடைசியாக தென் கொரியாவில் 1979 ஆம் ஆண்டு ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்ட நிலையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டு 6 மணி நேரத்தில் திரும்பபெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.