உலகம்

தடுப்பூசி போடாதவர்களுக்கு டெல்டா வைரஸ் பரவும்!

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம், 'டெல்டா' வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளது' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம், 'டெல்டா' வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளது' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இதுவரை பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்களில், டெல்டா வைரஸ் தான் வேகமாக பரவும் சக்தி உடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பற்றி சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.

தற்போது, 85 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் இந்த வைரஸ் வேகமாக பரவுவதாக தெரியவந்துள்ளது. இப்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதும் கவலையளிக்கிறது. விரைவில் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.அதனால், மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.