உலகம்

இந்தியாவுக்கு முதல் அடி: தொடங்கியது தலிபான்களின் விளையாட்டு!  

இந்தியாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தலிபான்கள் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

இந்தியாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தலிபான்கள் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே நீண்டகால வர்த்தக தொடர்பு இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவுனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தலிபான்கள் நிறுத்தியுள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பு இயக்குநர் அஜய் சகாய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானின் போக்குவரத்து வழிதடங்கள் வழியாகவே இந்தியாவுக்கு பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது இறக்குமதி பொருள்கள் போக்குவரத்தை தாலிபான்கள் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.