உலகம்

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 1,100 ஆக உயர்வு!!

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,100  ஆக அதிகரித்துள்ளது.

Suaif Arsath

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பக்திகா மாகாணத்தில்  பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தினால் 1,000 பேர் பலியானதாகவும், 1,500 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,100 பேர் ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நில நடுக்கத்தினால் நவீன கான்கிரீட் கட்டிடங்கள் தப்பினாலும், ஆயிரக்கணக்கான மண்வீடுகள் தரை மட்டமாகி உள்ளன. இதனால் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.