உலகம்

இலங்கைக்கு சென்றடைந்த 2ம் கட்ட நிவாரணப் பொருட்கள்!!

மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பிய 2ம் கட்ட அவரசகால உதவிப்பொருட்கள் இலங்கை சென்றடைந்தன.

Suaif Arsath

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. உணவு, பால் பவுடர், மருந்துத் தட்டுப்பாட்டைப் போக்க இந்தியா அவ்வப்போது இவற்றை அனுப்பி உதவி வருகிறது.

அதன்படி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 65 புள்ளி 3 கோடி ரூபாய் மதிப்பிலான 14 ஆயிரத்து 700 மெட்ரிக் டன் அரிசி, குழந்தைகளுக்கான 250 மெட்ரிக் டன் பால் பவுடர், 38 மெட்ரிக் டன் உயிர் காக்கும் மருந்துகள் இலங்கை சென்றடைந்தன. இந்த 2ம் கட்ட நிவாரணப் பொருட்களை இலங்கைக்கான இந்திய தூதர், இலங்கை சுகாதார அமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சர் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.