உலகம்

மலையிலிருந்து கவிழ்ந்த பேருந்து....

Malaimurasu Seithigal TV

பெருவில் சுற்றுலா சென்ற பேருந்து மலைப்பாதையிலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

வடமேற்கு பெருவில் உள்ள பியூரா என்ற இடத்திலிருந்து 60 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலைப்பாதையில் இருந்து விழுந்து நொறுங்கியது.  இந்த விபத்தில், 25 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்