உலகம்

பள்ளி மாணவர்களின் ஊர்வலத்திற்குள் அதிவேகமாக புகுந்த கார்: மாணவர்கள் மீது மோதிக் கொண்டு நிற்காமல் சென்ற வீடியோ இணையத்தில் வைரல்

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவர்களின் ஊர்வலத்திற்குள் அதிவேகமாக புகுந்த காரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Malaimurasu Seithigal TV

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் மில்வாக்கி என்னும் பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாலையில் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். 
அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று மாணவர்கள் மீதி மோதியவாறே பேரணிக்குள் நுழைந்தது. மாணவர்களின் மீது அடுத்தடுத்து மோதிக் கொண்டு கார் நிற்காமல் சென்றது. 


கார் மோதியதால் வலி தாங்காமல் மாணவர்கள் அலறியது அங்கிருந்தவர்களை நிலைகுலைய செய்தது. பேரணிக்குள் நுழைந்த காரை நிறுத்தும் நோக்கில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

ஆனால் கார் நிற்காமல் சென்றுள்ளது. இதன் காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. இதில் 11 பள்ளி மாணவர்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.