வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது.
இந்நிலையில் பொருளாதார நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான இந்திய உயர்மட்டக்குழு கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.
தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவை சந்தித்து இந்த சிக்கலான சூழலில் இருந்து இலங்கை மீண்டு வர ஒரு நெருங்கிய நண்பனாக முழு ஆதரவையும் இந்தியா வழங்கும் என குவாத்ரா உறுதியளித்தார். குறிப்பாக முதலீடுகளை அதிகரித்தல், இணைப்பு மற்றும் பொருளாதார இணைப்பை வலுப்படுத்துதல் மூலம் விரைவான பொருளாதார மீட்சிக்கு இந்தியா உதவும் எனவும் இந்தியக்குழுவினர் ஆதரவு தெரிவித்தனர்.