உலகம்

கிரே பட்டியலில் நீடிக்கும் பாகிஸ்தான்... சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு அறிவிப்பு...

பாகிஸ்தான் தொடர்ந்து சாம்பல் பட்டியலில் நீடிப்பதாக சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு அறிவித்துள்ளது. 

Malaimurasu Seithigal TV
பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கு எதிரான உலகளாவிய அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு பாகிஸ்தானை கடந்த 2018 ஆம் ஆண்டு சாம்பல் பட்டியலில் சேர்த்தது. இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு சாம்பல் பட்டியலில் இருந்து வெளியேறுவது தொடர்பான பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது. 
இந்த நிலையில் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் தொடர்ந்து "அதிகரித்த கண்காணிப்பு பட்டியலில்" உள்ளதாகவும் சாம்பல் பட்டியலில் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.