உலகம்

உலகின் மிக பெரிய விமானம் "மிரியா".. சுக்கு நூறாக்கிய ரஷ்யா.. வேதனையில் உக்ரைன் மக்கள்

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 5 வது தொடர்ந்து நடந்து வருகிறது. கீவ் தலைநகரை பிடிக்க ரஷ்யா படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

ரஷ்யா தாக்குதலால் உக்ரைனின் முக்கிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், கொரோனா தொற்று காலத்தில் உலகம் முழுவதும் உயிர்காக்கும் தடுப்பூசி, மருந்துகள் எடுத்து சென்று பெரும் உதவியாக இருந்த உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் "மிரியா". உக்ரைன் மற்றும் ரஷ்யா எதிரான போரில் ரஷ்ய படையால் சுக்கு நூறாக அழிக்கப்பட்டது.

இது குறித்து உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா ட்விட்டரில் கூறியது: - "ரஷ்யா எங்கள் மிரியா-வை அழித்திருக்கலாம். ஆனால் வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய அரசு.. நமது கனவை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. நாங்கள் வெற்றி பெறுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

A symbol of hope in the darkest hours of COVID,