உலகம்

மலைபாம்போடு விளையாடும் சிறுமி!...

இளங்கன்று பயம் அறியாது என்ற பழமொழிக்கு ஏற்றவாறு உள்ளது இக்குழந்தையின் பயம் அறியா விளையாட்டு.

Malaimurasu Seithigal TV

புதிதாக பிறக்கும் மான்குட்டி பயம் அறியாது துள்ளி விளையாடுவதை போல அக்குழந்தை ராட்சத மலைபாம்பிடம் ஆபத்தை உணராமல் விளையாடி வரும் காட்சிகள் வீடியோ மூலம் வெளிவந்துள்ளது.இக்கால கட்டத்தில் உள்ள குழந்தைகள் யாவரும் அச்சத்தை பற்றி கவலை கொள்ளாமல் வளர்ந்து வருகின்றனர்.

வலைதளங்களில் பதிவிட்ட வீடியொவில் அக்குழந்தை அச்சமின்றி மலைபாம்போடு விளையாடி மகிழ்ந்து இருப்பது பார்போரை பதறவைக்கின்றது. அக்குழந்தை பாம்பின் தலையை வருடிக் கொடுத்து அதன் மீது படுத்துக் கொண்டும் விளையாடி மகிழ்ந்துள்ளார். 

அதனுடன் snake._.world என்னும் இன்ஸ்டகிராம் பக்கத்தில்  வெளியிடப்பட்ட அக்குழந்தையின் வீடியோவுடன் மற்றொரு வீடியோவும் வெளிவந்தது.


மேலும் அந்த வீடியோவில் நாகபாம்பு ஒன்று தண்ணீர் அருந்தி தாகம் தணிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.அதில் ஒரு நபர் நாகபாம்பிற்கு தண்ணீரை அளிப்பதும் பதிவாகி இருக்கிறது.இந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் இது போன்ற வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.