உலகம்

“ஆபரேஷன் கங்கா” வா... உக்ரைனிலிருந்து 218 இந்தியர்களுடன் புறப்பட்ட 9 வது விமானம்...!!

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் 218 இந்தியர்களுடன் கூடிய 9 வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டு விட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tamil Selvi Selvakumar

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரில் இந்திய மாணவர்கள் பலரும் சிக்கி தவிக்கின்றனர். அவர்களையெல்லாம் மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால் இந்த மீட்பு பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.

இதற்காகவே ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரை தொடங்கி அதன்மூலம் நடந்து வரும் இந்த மீட்பு பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மேலும் இது தொடர்பாக அடுத்தடுத்து உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்.

தொடர்ந்து பணிகளில் அயராது உழைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளின் மூலம் உக்ரைன்வாழ் இந்தியர்கள் தனது தாய்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. 

இப்படி 1, 2 , 3 என அடுத்தடுத்து விமானங்களின் மூலம் உக்ரைன்வாழ் இந்தியர்களை டெல்லிக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளை அவர் தனிப்பட்ட முறையில் மேற்பார்வை செய்துக்கொண்டிருக்கிறார்.