உலகம்

32.65 கோடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு...! அச்சத்தில் மக்கள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32.65 கோடியாக உயர்ந்துள்ளது.

Tamil Selvi Selvakumar

கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது, உலகம் முழுவதும் உள்ள 221 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக  தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு வரும் நிலையிலும், வைரஸ் உருமாற்றமடைந்து மேலும் பாதிப்பை  அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 கோடியே 65 லட்சத்து 66 ஆயிரத்து 961 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்து 903 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 96 ஆயிரத்து 418 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26 கோடியே 63 லட்சத்து 82 ஆயிரத்து 825 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் உயிரிழந்துள்ளனர்.