உலகம்

கஞ்சா கடத்தி வந்த புறா.. தண்ணீர் குடிக்க தரையிறங்கும் போது கவனித்த அதிகாரிகள்

Suaif Arsath

பெரு நாட்டில் சிறைக்குள் கஞ்சா கடத்தி வந்த புறா ஒன்று பிடிபட்டுள்ளது. மழை பெய்ததையடுத்து ஹுவான்காயோ சிறை வளாக மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீரை குடிப்பதற்காக தரையிறங்கிய புறாவை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்தனர்.

அப்போது அதன் கழுத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய பொட்டலம் இருப்பதைக் கண்ட அவர்கள் புறாவைப் பிடித்து அந்த பொட்டலத்தை சோதனை செய்தனர். அதில் 30 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கஞ்சா புறா எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.