வடகொரியாவை நிறுவியவர் கிம் இல் சங் இவரது சகோதரரும் தற்போதைய அதிபரின் தாத்தாவுமான கிம் ஜோங் ஜூ வயது மூப்பு காரணமாக உயிழந்துள்ளார்.
வடகொரியாவை நிறுவிய கிம் இல் சங் அந்த நாட்டிற்காக தனது வாழ்க்கையையே அற்பனித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவரை தொடர்ந்து கிம் ஜோங் ஜு பொறுப்பேற்றுள்ளார்.தற்போது இவர்கள் மூன்று தலைமுறையாக ஆட்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
தனது தாத்தா இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அதிபர் இவர் வடகொரியா ஆட்சியின் முக்கிய பதவிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றினார் எனவும் அதற்காக அவருக்கு அரசு சார்பில் புகழாரம் தெரிவிக்கப்பட்டு வருதாகவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இவரது மறைவுக்கு நாடே இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் வட கொரியர்கள் ஒரு வார காலத்திற்கு மது அருந்தவோ அல்லது சிரிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.மளிகை கடைக்கு செல்வதற்கு கூட அனுமதி இல்லை எனவும் இப்படிப்பட்ட நடைமுறைகள் யாவும் அந்நாட்டின் வழக்கம் என கருதி வருகின்றனர்.
அரசு குடும்பத்தில் துக்க நிகழ்வு ஏற்பட்டால் அந்த நேரத்தில் நாட்டு மக்கள் மது அருந்தி போதையில் இருந்தால் அவர்கள் குற்றவாளியாக கருதப்பட்டு கடும் தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள் எனவும் அவை தற்போது வரை ஆட்சியில் தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
அதே போன்று துக்க நேரத்தில் சத்தமிட்டு அழுவது மற்றும் துக்க நாளாக இருக்கும் பட்சத்தில் பிறந்தநாள் வருவோர் அதனை கொண்டாட கூட முடியாது.துக்க நாட்களில் அவர்கள் ஒவ்வொருவரும் வருத்தப்பட வேண்டும் என்பதே சட்டதிட்டத்தில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சரியாக துக்க நாட்களில் வருத்தப்படுகிறார்களா என கண்காணிக்க காவல்துறை அதிகாரிக்களுக்கு உத்தரவிடப்படுவதாக தெரிவிக்கின்றனர். இப்படிப்பட்ட நடைமுறையால் போலீசாருக்கும் ஒரு மாத காலத்திற்கு நிம்மதி இருப்பதில்லை என்கின்றனர்.
வடகொரியாவில் வறுமையும், பட்டினியும் சூறைதாண்டவமாடி வரும் நிலையில்,அந்நாட்டு மக்கள் அதிபரின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து மக்களுக்கு கெடுபிடிகள் விதித்து வருவது நாட்டு மக்களை கவலையடைய செய்து வருகிறது.