உலகம்

ஒட்டகச்சிவிங்கியையே மிஞ்சும் அளவிற்கு காண்டாமிருகம்.. ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கதை

உயரத்தில் ஒட்டகச்சிவிங்கியையே மிஞ்சும் அளவிற்கு மிகப் பெரிய காண்டாமிருக இனம் 26.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக தகவல் கூறுகிறது.

Malaimurasu Seithigal TV
சீனாவின் வட மேற்குப் பகுதியில் மிகப் பெரிய காண்டாமிருக இனம் வாழ்ந்து உள்ளதை கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த புதியவகை காண்டாமிருக இனம் தொடர்பான விஷயங்களை சீனாவில் இருக்கும் கான்சு மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவத்தைக் கொண்டு உறுதி செய்து வருகின்றனர்.
அந்த ஆய்வில், இதற்கு கொம்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டாலும்,அந்த காண்டாமிருகத்தினால் ஏழு மீட்டர் உயரமுள்ள மரம், செடி கொடிகளை மேய்ந்திருக்க முடியும் என கருதப்படுகிறது. அதனால், இது ஒட்டகச்சிவிங்கியை விடவும் உயரத்தில் பெரியதாக இருந்திருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
21 டன் எடை கொண்ட தி பராசிராதெரியம் லின்சியான்ஸ் வகை காண்டாமிருக இனம் 26.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அதன் எடை நான்கு ஆப்பிரிக்க யானைகளின் எடைக்கு சமமாக இருந்துள்ளது என்ற தகவல் ஆச்சிரியமூட்டும் வகையில் உள்ளது. இது குறித்த ஆராய்ச்சிகள் கடந்த வியாழக்கிழமை அன்று 'கம்யூனிகேஷன் பயாலஜி' என்கிற அறிவியல் இதழில் வெளியிட்டு உள்ளனர்.