உலகம்

ஆப்கானிஸ்தானில் ஆண்கள் முடி மட்டுமே வெட்ட வேண்டும் ஷேவ் செய்ய கூடாது: தடை விதித்த தலிபான்கள் ...

சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

அமெரிக்க படைகள் ஆஸ்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதை அடுத்து தலிபான்கள் அங்கு ஆட்சிக்கு வந்தது. இதனையடுத்து அங்கு மிக கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. முகச்சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் இதனால் ஹெல்மாண்ட் மாகாணத்தில் சலூன் கடைக்கு வரும் ஆண்களுக்கு முடிமட்டுமே திருத்த வேண்டும் என்று அவர்களுக்கு முகசவரம் செய்ய கூடாது என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்தத் தடையை மீறிப் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தாலிபன் அரசின் மத காவல்துறை தெரிவித்துள்ளது.

இதே மாதிரியான உத்தரவுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தலைநகர் காபூலில் உள்ள முடிதிருத்தும் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.தாலிபன்கள் முன்பு ஆட்சி செய்த 1996 - 2001 காலகட்டத்தில் இருந்ததைப் போலல்லாமல் தற்போதைய ஆட்சி மிதமானதாக இருக்கும் என்றும் தாலிபன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போது கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.