உலகம்

ப்பா.. சரணடைந்த ரஷ்ய வீரருக்கு டீ, உணவு கொடுத்த உக்ரைனியர்கள்.. கண்ணீர் விட்டு அழுத வீரர்

சரணடைந்த ரஷ்ய வீரருக்கு உக்ரைன் மக்கள் டீ மற்றும் உணவு கொடுத்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

உக்ரைன் மீது 8ஆவது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இதற்கிடையில், சில ரஷிய வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தும் வருகின்றனர்.

அந்தவகையில், கீவ் நகர் அருகே ரஷிய பாதுகாப்பு படை வீரர் தனது ஆயுதங்களை கைவிட்டு உக்ரைனியர்களிடம் சரணடைந்தார். அப்போது அந்த ரஷிய வீரருக்கு உக்ரைன் மக்கள் டீ மற்றும் உணவு கொடுத்தனர். மேலும், அங்கிருந்த ஒரு உக்ரைன் பெண் தனது செல்போன் மூலம் வீரரின் தாய்க்கு போன் செய்து கொடுத்த போது அவர் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் வெளியாகியுள்ளது.