உலகம்

வரலாறு காணாத வகையில் வீழ்ந்த ரூபாய் மதிப்பு......

Malaimurasu Seithigal TV

பாகிஸ்தான்  ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. 

கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் பாகிஸ்தான் சிக்கியுள்ளதன் காரணமாக, உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  எரிபொருள் தடுப்பாடு, விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்னைகளை பாகிஸ்தான் சந்தித்து வருவதால் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்பட சர்வதேச நிதி அமைப்புகளிடம் கடன் வாங்கும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. 

இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் 262 ரூபாயாக உள்ளது. 

-நப்பசலையார்