உலகம்

”உலகிற்கு சீனா வேண்டும்..” பதவியேற்ற பின் ஜி ஜின்பிங்!!

Malaimurasu Seithigal TV

மூன்றாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு, ஜி ஜின்பிங் அவரது உரையை நிகழ்த்தினார். 

சீனா வரலாற்றில் முதல் முறையாக:

சீன அதிபராக ஜி ஜின்பிங் வரலாற்று சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக பதவியேற்றார்.  ஜின்பிங் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார். மாவோ சேதுங்கிற்குப் பிறகு நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளார் ஜி ஜின்பிங்.

அதேநேரம், மூன்றாவது முறையாக அதிபராக பதவியேற்ற பின்னர், அவர் தனது உரையையும் நிகழ்த்தியுள்ளார். சீனாவின் விரைவான வளர்ச்சிக்கான எதிர்கால கொள்கை குறித்தும் அவர் பேசியுள்ளார்.

உலகிற்கு சீனா தேவை:

பதவியேற்றப் பின்னர் பேசிய ஜி ஜின்பிங், உலகிற்கு சீனா தேவை என்று கூறியுள்ளார்.  உலகம் இல்லாமல் சீனா வளர்ச்சியடையாது என்றும், சீனா இல்லாமல் உலகம் முன்னேற முடியாது என்றும் ஜின்பிங் கூறியுள்ளார்.

மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் உலகிற்கு சீனாவின் பங்களிப்பு மறுக்க முடியாதது எனவும் பேசியுள்ளார்.

ஜின்பிங்கின் இரண்டு அற்புதங்கள்:

ஜின்பிங் ”சீர்திருத்தம் மற்றும் வெளிப்படைத்தன்மையை நோக்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக அயராத முயற்சிகளுக்குப் பிறகு, நாங்கள் இரண்டு அற்புதங்களைச் செய்துள்ளோம் - விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் நீண்ட கால சமூக ஸ்திரத்தன்மை. மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு எங்களது கட்சியும் நானும் எங்கள் கடமைகளை விடாமுயற்சியுடன் செயற்படுத்துவோம் என உறுதியளித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

ஜின்பிங்கிற்காக மாற்றப்பட்ட விதி:
 
சீனாவில் 1982 இல், மிக உயர்ந்த பதவிகளுக்கான அதிகப்பட்ச பதவிக்காலம் 10 ஆண்டுகள் என்ற விதி உருவாக்கப்பட்டது. இருப்பினும், ஜின்பிங்கை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் வைத்திருக்க இந்த விதி திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்