உலகம்

ஒரே நேரத்தில் 5000 ஆயிரம் செல் போன்களை சார்ஜ் செய்யக்கூடிய உலகின் மிகப்பெரிய பவர் பேங்க்..!

Malaimurasu Seithigal TV

நம் அனைவருக்கும் கூடுதல் பேட்டரிக்காக பவர் பேங்க் தேவை படுகிறது. ஆனால், அதில் சில ஆயிரம் மில்லியம்பியர்களை மட்டுமே சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.

இந்நிலையில், ஹேண்டி கெங் (Handy Geng) என்று அழைக்கப்படும் வெல்டிங் கைவினை கலைஞர், தனது நண்பர்களிடம் தன்னை விட பெரிய பவர் பேங்குகள் இருப்பதை கண்டு இதை விட பெரிய பவர் பேங்க் உருவாக்கும் யோசனை வந்துள்ளது.

ஹேண்டி கெங், தனது வெல்டிங் திறமைகளை பயன்படுத்தி 5000 ஆயிரம் செல் போன்களை ஒரே பவர் பேங்கில் சார்ஜ் செய்ய கூடிய ஒரு பெரிய பவர் பேங்கை தயாரித்து உள்ளார். இந்த பவர் பேங்க் 27,000,000 mAh திறன் கொண்டது. இது தான் உலகின் மிகப்பெரிய பவர் பேங்க் ஆக உள்ளது.

இந்த பவர் பேங்கில் மின் சாதனங்களை சார்ஜ் செய்ய 60 பவர் சாக்கெட்டுகள் உள்ளன. இந்த பவர் பேங்கைப் பயன்படுத்தி டிவி, எலெக்ட்ரிக் குக்கர், வாஷிங் மெஷின் போன்றவற்றை இயக்கும் திறனும் இந்த பவர் பேங்கில் உள்ளது.