உலகம்

உலகின் மிக நீண்ட கண் இமைகள் ... சீன பெண் கின்னஸ் சாதனை

சீனாவை சேர்ந்த பெண், உலகின் மிக நீண்ட கண் இமைகளுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

சீனாவை சேர்ந்த பெண், உலகின் மிக நீண்ட கண் இமைகளுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

யூ ஜியாங்சியா என்ற பெண்ணின் கண் இமைகளின் மொத்த நீளம் 8 அங்குலம் ஆகும்.  கடந்த 2016-ம் ஆண்டில் தாம் ஏற்படுத்திய சொந்த சாதனையை அவரே முறியடித்து உள்ளார்.

ஊசி போல் கண் இமைகளை நீட்டி கொள்ளும் சீன பெண், இது நிச்சயம் கடவுள் புத்தர் அளித்த பரிசு என கருதுகிறார்.

நீண்ட கண் இமைகளால் அன்றாட வாழ்க்கையில் எந்த சங்கடமும், பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அதற்கு பதிலாக, தமக்கு அளவு கடந்த மகிழ்ச்சியே ஏற்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து யூ ஜியாங்சியா வெளியிட்ட வீடியோ வைரலாகி உள்ளது.