உலகம்

காரை ஹோட்டலுக்குள் ஓட்டிய இளைஞர்.....

Malaimurasu Seithigal TV

சீனாவில் ஹோட்டலுக்குள் காரை ஓட்டிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். 

ஷாங்காயில் உள்ள ஒரு ஹோட்டலில் இளைஞர் ஒருவர் தங்கியிருந்தார்.  அவர் அங்கு தங்கியிருந்த போது அந்த இளைஞரின் லேப்டாப் காணாமல் போனதாக தெரிகிறது.  பல மணிநேரம் தேடியும் லேப்டாப் கிடைக்கவில்லை.

இதற்கு ஹோட்டல் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் ஹோட்டலுக்குள் காரில் சென்று பொருட்களை சேதப்படுத்தினார்.  இதனையறிந்து அங்கு சென்ற போலீசார் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

-நப்பசலையார்