உலகம்

ஒமிக்ரான் பரவல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை..!

நல்ல வார்த்தை சொன்ன உலக சுகாதர அமைப்பு..!

Malaimurasu Seithigal TV

ஒமிக்ரான் பரவல் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக விலகாத நிலையில், உருமாறிய ஒமிக்ரான் கொரோனா பரவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 40 நாடுகளில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் மாநாடு ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஒமிக்ரான் தீவிரமான வகையாக மாறுமா என்று கணிக்க இயலாது என்றும், தென் ஆப்ரிக்காவில் தினசரி பாதிப்பு இரட்டிப்பாகிறது என்றும் குறிப்பிட்டார். நாம் தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட சவுமியா, அதே சமயம் பீதி அடையாமல் இருக்க வேண்டும் எனவும் கூறினார். உலகளவில் 99 சதவீத நோய்த்தொற்றுக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் காரணம் என்பதை சுட்டிக் காட்டி அவர்,  இந்த உருமாறிய வைரசும் அதிகம் பரவக்கூடியதாக இருக்கலாம் என்றும், தெரிவித்தார்.