60 ஆண்டுகளில்.. எந்தவொரு அமெரிக்க அதிபரும் செய்யாத ஒரு "சம்பவம்" - சீன அதிபர் ஜின்பிங் வருகைக்கு கிடைத்த 'அந்த' மரியாதை! ஏன்? 
உலகம்

60 ஆண்டுகளில்.. எந்தவொரு அமெரிக்க அதிபரும் செய்யாத ஒரு "சம்பவம்" - சீன அதிபர் ஜின்பிங் வருகைக்கு கிடைத்த 'அந்த' மரியாதை! ஏன்?

உலக முக்கியத்துவம் பெற்ற இந்த சந்திப்பில் இரண்டு தலைவர்களும் மூடிய அறையில் பேச்சு வார்த்தை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று வரவேற்றுள்ளார்.

2015ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு சென்றுள்ள சீன அதிபர், அங்கே ராணுவ அணிவகுப்புடன் 100 அடி நீள சிகப்பு கம்பளத்தில் வரவேற்கப்பட்டார்.

சீனக் கொடியும் அமெரிக்க கொடியும் பறக்க அமெரிக்க நேவியின் இசை முழங்க ஜி ஜின்பிங்கும் அவரது மனைவி பெங் லியுவானும் அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தனர். டொனால்ட் ட்ரம்ப்பும் அவரது மனைவி மெலினாவும் அவர்களை வரவேற்றனர்.

ட்ரம்ப் குளிர்காலத்தில் அணியும் நீளமான கோட்டும், கையுறையும் அணிந்திருந்தார். சீனாவின் முதல் பெண்மணி கலாச்சார ஆடையில் வருகை தந்திருந்தார்.

நால்வரும் சிறிது நேரம் பேசிய பிறகு இணைந்து நடந்து வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.

அப்போது ராணுவ அணிவகுப்பின் ஒரு பகுதியாக பி-2 வெடிகுண்டு விமானம் வானில் பறந்தது. அதன் இரைச்சலை தாங்க முடியாமல் முகம் சுழித்தார். ஆனால் ஜி ஜின்பிங் நிலையாக இருந்தார்.

ட்ரம்ப் சீன அதிபருடன் நிற்கும் போது மேலே பி1 விமானம் பறக்கும் புகைப்படத்தை அவரது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து "ONLY TRUMP" எனப் பதிவிட்டு மார்தட்டியிருக்கிறார்.

உலக முக்கியத்துவம் பெற்ற இந்த சந்திப்பில் இரண்டு தலைவர்களும் மூடிய அறையில் பேச்சு வார்த்தை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஒரு அரசு விருந்து மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஈரான் போர், தைவான், நீட்டிக்கப்பட்ட வர்த்தக போர் நிறுத்தம் என விவாதிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன.

இந்த சந்திப்பின் இன்னொரு சிறப்பு சுமார் 64 ஆண்டுகள் கழித்து வெளிநாட்டு தலைவர் ஒருவரை அமெரிக்க அதிபர் விமான நிலையத்துக்கு சென்று நேரடியாக வரவேற்றுள்ளார். இதிலிருந்து இந்த சந்திப்பு எத்தனை முக்கியத்துவம் பெற்றது என்பதை அறிந்துகொள்ளலாம்.

1962-ல், அப்போதைய ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி, பிரிட்டிஷ் பிரதமர் ஹரோல்ட் மக்மில்லனை வரவேற்றது தான் முந்தைய பதிவு.

ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் இடையே நல்ல நட்புறவு இருப்பதால் அவர் தானே விமான தளத்துக்கு செல்ல திட்டமிட்டதாக மெலினா ஒரு செய்திதாளத்தில் கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்