உலகம்

வானிலை அறிக்கையின் ஆபாச பட காட்சிகள் ஒளிபரப்பு..மக்களிடம் மன்னிப்பு கேட்ட நியூஸ் சேனல்

Malaimurasu Seithigal TV

அமெரிக்காவில் தானியார் தொலைக்காட்சி ஒன்றி வானிலை அறிக்கையின் போது திடீரென ஆபாச பட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதால் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வாஷிங்டனில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில், மாலை 6 மணி செய்தி ஒளிபரப்பின் போது, செய்திவாசிப்பாளர் வானிலை அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்க, பின்னால் வானிலை தொடர்பான கிராஃபிக் வீடியோவுக்கு பதிலாக தவறுதலாக ஆபாச பட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

கிட்டதட்ட13 நெடிகள் வரை ஓடிய ஆபார பட காட்சிகளால் செய்தியை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அதிச்சியடைந்தனர். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு ஒளிபரப்பை நிறுத்திய செய்தி நிறுவனம் பின் இரவு 11 மணி செய்தி ஒளிபரப்பின் போது மன்னிப்பு கோரியது.