உலகம்

20 தாலிபான் பயங்கரவாதிகள் பலி... ஆப்கன் படை தாக்குதல் ...

ஆப்கன் படை தாக்குதலில் 20 தாலிபான் பயங்கரவாதிகள் பலி.

Malaimurasu Seithigal TV
ஆப்கானிஸ்தானில் ராணுவ படை நடத்திய வான்வழி தாக்குதலில் 20 தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா படை வெளியேற்றத்தை தொடர்ந்து ஆப்கனில் தாலிபான்களின் கை ஓங்கி வருகிறது.
இதற்கு ஆப்கன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி ஆப்கானிஸ்தானில் கிழக்கு குணார் மாகாணத்தில் காஜி அபாத் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அந்நாட்டு ராணுவம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.
இதில் தாலிபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கப்பட்ட தாகவும்,  இந்த தாக்குதலில் 20 தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஆப்கன் ரணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில்  8 பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.