உலகம்

வரலாறு காணாத அளவிற்கு உலோகம், எரிபொருள் விலை.. பணவீக்கத்தை எதிர்கொள்ளும் பெரும் நிறுவனங்கள் - எலான் மஸ்க் தகவல்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவிலான பணவீக்கத்தை  எதிர்கொள்வதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Suaif Arsath

உக்ரைன் மீதான தாக்குதல்- ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட இருநாடுகள் மட்டுமல்லாமல் உலகத்தையே பாதிப்புக்குள்ளாக்கத் தொடங்கியுள்ளது.

இவ்வளவுக்கும் மேற்குலக நாடுகள் விதித்த தடைகளில் உலோகங்கள், எண்ணெய் போன்றவை கிடையாது. அப்படி இருந்தும் கார்களில் பயன்படுத்தப்படும் உலோகங்கள், சிப்கள், எரிபொருள் என அனைத்தின் விலைகளும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகின்றன.
  
இதனால், மின்சார வாகனங்களை தயாரிக்கும் தனது டெஸ்லா நிறுவனமும், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்சும் பணவீக்கத்தை சந்தித்துள்ளதாக அந்நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலக கோடீஸ்வரருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். தனது நிறுவனங்களுக்கு மட்டும் இந்த நிலை இல்லை என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  பணவீக்க விகிதக் கண்ணோட்டம் குறித்த கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் உக்ரைன்-ரஷ்யா மோதலால் 2008-ம் ஆண்டுக்குப் பிறகு பொருட்களின் விலை  உச்ச நிலைக்கு  சென்றுள்ளது தொடர்பாக வெளியான கட்டுரையையும் அவர் மறுபதிவு செய்துள்ளார்.