உலகம்

பிரிட்டன் ராணியை சந்திக்கும் அமெரிக்க அதிபர்: எதற்கு?

Malaimurasu Seithigal TV

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் சந்திப்பு அடுத்த வாரம் நடக்க உள்ளது.

பிரிட்டனில் ஜூன் 11 முதல் 13வரை 'ஜி 7' நாடுகளின் உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரடியாக கலந்து கொள்கிறார். இது பைடனின் முதல் வெளிநாட்டு பயணம். இப்பயணத்தின் போது ஜூன் 13ல் பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை, அதிபர் பைடன் - மனைவி ஜில் பைடன் சந்தித்துப் பேசுகின்றனர்.

1952ல் பிரிட்டன் ராணியாக எலிசபெத் முடிசூட்டிக்கொண்டதில் இருந்து, இந்த 69 ஆண்டுகளில் 1963 - 1969 வரை அதிபராக இருந்த லிண்டன் ஜான்சனை தவிர அனைத்து அமெரிக்க அதிபர்களையும் சந்தித்து பேசியுள்ளார்.