உலகம்

கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரிக்க அமெரிக்கா மறுப்பு ..

பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மறுத்துள்ளது.

Malaimurasu Seithigal TV

மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கொரோனா-வுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இது தற்போது இந்தியாவில் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் ஒகுஜென் நிறுவனத்துடன் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை சர்வதேச அளவில் வணிகமயமாக்குவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்த நிலையில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி கோரி ஒகுஜென் நிறுவனம் அமெரிக்காவிடம் விண்ணப்பித்திருந்தது. இதனை பரிசீலித்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. கூடுதலாக பரிசோதனைகளை நடத்திய முடிவுகளை தர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.