உலகம்

நீரில் மிதக்கும் நேபாளம்... வரலாறு காணாத தொடர் மழை...

நேபாளத்தில் தொடர் கனமழை கொட்டி வருவதால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

Malaimurasu Seithigal TV
பருவமழையின் காரணமாக நேபாளம் அதிகளவில் மழைப்பொழிவை பெற்று வருகிறது. இதனால் நேபாளத்தில் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் சாலையில் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் பீகாருக்கு வரும் நதிகளான பாக்மதி, புர்கி கந்தக் மற்றும் கமலா ஆகியவற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகயில் மழை நீர் தேங்கி ஆங்காங்கே வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும்  நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகள்  அனைத்தும் வெள்ள நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அனைத்தும் நீரில் சிக்கி தவித்தன.