உலகம்

மறைந்த நண்பனின் மகளுக்கு தந்தையாக நின்ற வின் டீசல்!

Malaimurasu Seithigal TV

பால் வாக்கர் மகளின் திருமணத்தில், தந்தை ஸ்தானத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் இருந்த சம்பவம், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் திரைப்படத்தின் முதல் ஆறு பாகங்களில் நடித்த பிரபல நடிகர் பால் வாக்கர், கடந்த 2013-ம் ஆண்டில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அவருடைய மகளும் பிரபல மாடலுமான மீடோ வாக்கர், டொமினிகன் குடியரசில் நடிகர் லூயிஸ் ஆலனை மணந்துள்ளார். அப்போது, மீடோ வாக்கருக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து கரம் பிடித்து கொடுத்தது, பால் வாக்கருடன் பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் திரைப்படத்தில் இணைந்து நடித்த வின் டீசல் தான்.

மேலும் இந்த திருமண நிகழ்ச்சியில் பால் வாக்கரின் காதலியாக நடித்த ஜோர்டானா புரூஸ்டரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.