உலகம்

ஏழை நாடுகளுக்கு உதவாத பணக்கார நாடுகள்... உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆதங்கம்...

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஏழைநாடுகளுடன் தடுப்பூசியை பகிர்ந்துக் கொள்ள தயங்குகின்றன என உலக சுகாதார அமைப்பின் தலைவர் வருத்தம்.

Malaimurasu Seithigal TV
பணம் படைத்த நாடுகள், தொற்றால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஏழை நாடுகளுடன் தடுப்பூசியை பகிர்ந்துக் கொள்ள தயங்குவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆபிரிக்காவில் கடந்த ஒரே வாரத்தில் தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் 40 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.
பணக்கார நாடுகள், தொற்றால் அதிக ஆபத்து இல்லாத இளைஞர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருவதாகவும், ஆனால் அதுவே ஏழை நாடுகளில் உயிரை காக்கக்கூடிய தடுப்பூசிக்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதாகவும் வேதனை தெரிவித்தார்.
எங்களுக்கு தடுப்பூசியை கொடுத்து உதவுங்கள் என ஏழை நாடுகள் கொஞ்சுவதாக குறிப்பிட்ட அவர், பணம் படைத்த நாடுகள் ஏழை நாடுகளுடன் தடுப்பூசியை பகிர்ந்துக் கொள்ள தயங்குவதாகவும், உலகளாவிய சமூகம் தோல்வியடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.