உலகம்

ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை...

ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

 ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். தங்களது ஆட்சியில் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்று தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர். இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தலிபான்கள் பல புதிய விதிமுறைகளை விதித்துள்ளனர். குறிப்பாக நிகழ்ச்சிகளில் இனி பெண்கள் தோன்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  எனினும் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.