உலகம்

உலக ஆணழகன் போட்டி- தங்கம் வென்ற தமிழக வீரர்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

47 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற போட்டியில், ஜூனியர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சுரேஷ், ஆணழகன் பட்டத்தைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இதே பிரிவில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் விக்னேஷ், வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக நடைபெற்ற சீனியர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த பெஞ்சமின் வெண்கலப் பதக்கம் வென்றார்.