உலகம்

உலக அமைதியே முக்கியம்... பிரதமர் மோடியுடன் விவாதம்!!!

Malaimurasu Seithigal TV

இருநாட்டு வளர்ச்சி மற்றும் உலக அமைதி தொடர்பாக விவாதிக்க முக்கியத்துவம் அளிப்பதாக இந்தியா வந்தடைந்த ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ், தெரிவித்துள்ளார். 

இந்தியா - ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான ஆலோசனை நெறிமுறை, கடந்த 2011ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.  இவ்வமைப்பு உருவாக்கிய பிறகு, முதன்முறையாக தனிவிமானம் மூலம் ஓலாப், டெல்லி வந்தடைந்தார்.  தொடர்ந்து ராணுவ மரியாதையை அவர் ஏற்றதையடுத்து, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். 

இதையடுத்து பிரதமர் மோடியுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், இருநாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவோம் என உறுதியளித்துள்ளார்.