உலகம்

ஒமைக்ரானை விட வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பிரான்சில் கண்டறியபட்டுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சி!!..

புதிய வகை கொரோனா வைரஸ் பிரான்ஸில் கண்டறியபட்டுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

உலகம் முழுவதும் கொரோனா தொற்று உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், கடந்த டிசம்பர் 10-ந் தேதி மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் இருந்து வந்த பயணிக்கு முதல்முறையாக உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தோர் மார்சேயில்ஸ் பகுதியை சேர்ந்த 12 பேருக்கு இந்த வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த உருமாறிய கொரோனாவுக்கு IHU B.1.640.2 வகை பெயரிட்டுள்ள விஞ்ஞானிகள், இந்த வகை தொற்று 46 உருமாற்றங்களை கொண்டது எனவும், ஒமைக்ரானை விட வீரியமிக்கதாக இருக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர். பிற நாடுகளில் இன்னும் இந்த வகை தொற்று கண்டறியப்படாத நிலையில், உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.