உலகம்

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 59.05 லட்சமாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42.48 கோடியாக அதிகரித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

சீனாவில் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலகம் நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில், அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
 
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42.48 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 59.05 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 35.03 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.