உலகம்

பாதுகாப்பை விட லாபம் முக்கியமா? குற்றச்சாட்டுக்கு ஜுக்கர்பர்க் மறுப்பு  

பயனர்களின் பாதுகாப்பை விட லாபமே பிரதானமாக கொண்டு செயல்படுவதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

பயனர்களின் பாதுகாப்பை விட லாபமே பிரதானமாக கொண்டு செயல்படுவதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளங்களில் மிகவும் பிரபலமான பேஸ்புக் தற்போது சர்வதேச அளவில் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இதனை பதின் பருவ சிறார்கள் பயன்படுத்துவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில்  குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பேஸ்புக் பக்கத்தில் பல உள்ளடக்கங்கள் வெளியிடப்படுவதாகவும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறி அந்நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், லாபத்திற்காக மக்களை கோபப்படுத்தும் உள்ளடக்கத்தை வேண்டுமென்றே வெளியிடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் நியாயமற்றது என கூறியுள்ளார்.