ரகசிய code அனுப்பிய விமானி.. வார் ரூமில் இருந்து வந்த உத்தரவு! பயணிகளுடன் விமானத்தை கடத்த முயற்சி? Air India (File Photo)
சிறப்பு செய்திகள்

ரகசிய code அனுப்பிய விமானி.. வார் ரூமில் இருந்து வந்த உத்தரவு! பயணிகளுடன் விமானத்தை கடத்த முயற்சி?

AI-2030 விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு வருவதாகவும், சூழ்நிலை சாதாரணமாக இருப்பதாகவும் அதானி விமான நிலைய நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாலை முரசு செய்தி குழு

ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரத்தில் இருந்து டெல்லிக்கு பிறந்த ஏர் இந்தியா விமானம் கடத்தல் சந்தேகம் காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது.

AI-2030 என்ற விமானம் காலை 9:35 மணிக்கு ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளது. உடனடியாக பாதுகாப்புச் சோதனைகளுக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்ட விசாரணையில் விமானத்தில் செயல்பாட்டில் எந்த அசாதாரண சமிக்ஞையும் இல்லை எனத் தகவல்.

முதற்கட்ட தகவல்களின்படி, அகமதாபாத் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் (ATC), காலை 9 மணியளவில் அந்த விமானத்திலிருந்து சில வினாடிகளுக்கு அவசரகால சிக்னலைப் பெற்றுள்ளது.

விமானி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விமானப் போக்குவரத்து டிரான்ஸ்பாண்டர் குறியீடான 'ஸ்குவாக் 7500' குறியீட்டைச் செயல்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது விமானக் கடத்தல் அல்லது சட்டவிரோத நடவடிக்கை குறித்து வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு ரகசியமாக எச்சரிக்கை செய்யப் பயன்படுத்தப்படும் குறியீடாகும்.

சிக்னலைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காலை சுமார் 9:10 மணியளவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி விமான நிலையத்தின் வார் ரூம் அதிகாரிகள் விமானத்தை ஜெய்ப்பூருக்குத் திருப்பிவிட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி ஜெய்ப்பூரில் தரையிறங்கியபிறகு, காலை 9:45 மணிக்கு விமானம் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தும் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

AI-2030 விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு வருவதாகவும், சூழ்நிலை சாதாரணமாக இருப்பதாகவும் அதானி விமான நிலைய நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜெய்ப்பூர் விமான நிலையம் அதானி குழுமத்தால் இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இறக்கிவிடப்பட்ட பயணிகள் மாற்று விமானம் மூலாமாக அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு கூட்டிச் செல்லப்படுவார்கள் என ஆதானி குழும நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்